Skip to main content
Source
Hindu Tamil Thisai
https://kamadenu.hindutamil.in/politics/criminal-cases-against-72-out-of-118-telangana-mlas
Author
காமதேனு
Date

தெலங்கானாவில் உள்ள 118 எம்எல்ஏக்களில் 72 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நவ.30-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது

இந்த சூழலில் தெலங்கானா எம்எல்ஏக்களின் குற்றவியல், நிதி மற்றும் பின்னணி விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தெலங்கானா தேர்தல் கண்காணிப்பு குழு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், தெலங்கானாவில் உள்ள 119 எம்எல்ஏக்களில் 118 பேரில் 72 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், 46 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது செகந்திராபாத் கான்ட் தொகுதி காலியாக உள்ளது.

தெலங்கானாவின் 118 எம்எல்ஏக்கள் 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் அதன்பிறகு நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலைமுயற்சி தொடர்பான வழக்குகள் 7 எம்எல்ஏக்கள் மீது இருப்பதாகவும், 4 எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த 101 எம்எல்ஏக்களில் 59 (58 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஏஐஎம்ஐஎம்மின் 7 எம்எம்ஏக்களில் 6 எம்எல்ஏக்கள் (68 சதவீதம்), காங்கிரஸ் 6 எம்எல்ஏக்கள் (67 சதவீதம்), பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களில் ஒருவர் மீது கடுமையாக குற்ற வழக்குகள் இருப்பதாக பிரமாணப் பத்திரங்களில் தெரிவித்துள்ளனர் என்று ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


abc