Skip to main content
Source
Dinamani
https://www.dinamani.com/india/2023/aug/02/4001-mlas-own-assets-worth-rs-54545-cr-adr-4047644.html
Author
DIN
Date

நாட்டில் உள்ள எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி என்று ஜனநாயக சீா்திருத்தங்கள் கூட்டமைப்பின் (ஏடிஆா்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிடும் முன், எம்எல்ஏக்கள் சமா்ப்பித்த தங்கள் சொத்து விவரம் அடங்கிய பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து ஏடிஆா் மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

நாட்டிலுள்ள 4,033 எம்எல்ஏக்களில் 4,001 எம்எல்ஏக்களின் தோ்தல் பிரமாண பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, அவா்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி. இது நிகழ் நிதியாண்டில் நாகாலாந்து, மிஸோரம், சிக்கிம் மாநிலங்களின் மொத்த ஆண்டு பட்ஜெட்டான ரூ.49,103 கோடியைவிட அதிகம்.

இதில் பாஜக எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.16,234 கோடி; காங்கிரஸ் எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.15,798 கோடி.

4,001 எம்எல்ஏக்களின் மொத்த சொத்து மதிப்பான ரூ.54,545 கோடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடைய சொத்து மதிப்பின் பங்கு 58.73 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


abc