Source: 
Author: 
Date: 
28.02.2020
City: 

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நன்கொடை மூலமாக பா.ஜனதா ரூ.742 கோடியும், காங்கிரஸ் ரூ.148 கோடியும் நிதி திரட்டியதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், ‘அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிபாா்ம்ஸ்’ (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு இதுதொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2017-18-ம் ஆண்டில் பா.ஜனதா நன்கொடையாக ரூ.437.04 கோடி பெற்றது. இது, 2018-19-ம் ஆண்டில் 742.15 கோடியாக அதிகரித்தது. தனிநபா், நிறுவனங்கள் என 4,483 நன்கொடைகள் மூலம் இந்த தொகை திரட்டப்பட்டது. இதேபோல், கடந்த 2017-18-ல் காங்கிரஸ் நன்கொடையாக ரூ.26 கோடி பெற்றது. இது, கடந்த 2018-19-ம் ஆண்டில் 148.58 கோடியாக அதிகரித்தது. இந்த தொகை, 605 நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது.

2018-19-ம் நிதியாண்டில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் சோ்த்து டாடா குழுமம் கட்டுப்பாட்டில் உள்ள புராக்ரஸிவ் எலெக்ட்ரல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இந்த நன்கொடைகள் அனைத்தும் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக பெறப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாக பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி, தோ்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இதே தகவலை, அக்கட்சி கடந்த 13 ஆண்டுகளாக தோ்தல் ஆணையத்தில் தெரிவித்து வருகிறது என்று ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நன்கொடைகள் மராட்டியத்திலிருந்து வந்துள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளது. எங்கிருந்து வந்தது என்றால் கார்ப்பரேட் அல்லது வர்த்தக துறையிடமிருந்து அதிக நன்கொடைகள் வந்துள்ளன. மராட்டியத்திலிருந்து மட்டும் ரூ.542 கோடி நன்கொடை தொகை கட்சிகளுக்கு வந்துள்ளன. டெல்லியிலிருந்து ரூ.141 கோடி, ரூ.55.31 கோடி குஜராத்திலிருந்து வந்துள்ளது.

மொத்த நன்கொடை தொகையில் சுமார் 92 சதவீதம் கார்ப்பரேட், வர்த்தக, தொழில் துறையிலிருந்து கட்சிகளுக்கு வந்துள்ளது. அதாவது 876.11 கோடி ரூபாய். கார்ப்பரேட் வர்த்தக துறை மேற்கொண்ட 1775 நன்கொடைகளில் 1575 நன்கொடைகள் பா.ஜனதாவுக்கு சென்றுள்ளன. அதாவது 692.08 கோடி ரூபாய் பா.ஜனதாவுக்கு தொழிற்துறையினரிடமிருந்து மட்டும் கிடைத்துள்ளன. இதே துறையினரிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடை ரூ.122.5 கோடியாகும்.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method