நாடாளுமன்றத்தின் 40 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தன்னார்வ அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் எம்.பி.க்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், அவர்களின் சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து "அசோசியேஷன் ஃபார் டெமாக்ரேடிக் ரிஃபார்ம்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன் அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
விவரங்கள் ஆய்வு செய்யப்பட்ட மொத்த எம்.பி.க்கள் - 763
குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் - 306 (40 சதவீதம்)
தீவிர குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் -194 (25 சதவீதம்)
கோடீஸ்வர எம்.பி.க்கள் - 53 (7 சதவீதம்)
Source
Dinamani
https://www.dinamani.com/india/2023/sep/14/40percent-of-sitting-mps-facing-criminal-charges-adr-report-4072546.html
Date