Skip to main content
Source
Daily Thanthi
https://www.dailythanthi.com/News/India/bjp-got-614-crore-as-donation-congress-94-crore-in-2021-22-report-899733
Author
தினத்தந்தி
Date

2021-22-ம் ஆண்டில் பா.ஜ.க. ரூ.614 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.94 கோடி கிடைத்தது.

புதுடெல்லி,

ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.), தேசிய கட்சிகள் பெற்றுள்ள நன்கொடைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் 2021-22-ம் ஆண்டில் தேசிய கட்சிகள் 7 ஆயிரத்து 141 நன்கொடைகள் மூலம், ரூ.780.774 கோடி பெற்றுள்ளன. இதில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடைகளே சேர்க்கப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டு நன்கொடையைவிட ரூ.187 கோடி (31.5 சதவீதம்) அதிகமாகும்.

அதிகபட்சமாக மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க. 4 ஆயிரத்து 957 நன்கொடைகள் மூலம் ரூ.614.63 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1255 நன்கொடைகள் மூலம் ரூ.95.46 கோடி பெற்றுள்ளது. பா.ஜ.க. முந்தைய ஆண்டில் ரூ.477.55 கோடி நன்கொடை பெற்றிருந்தது. தற்போது 28.71 சதவீதம் அதிகமாக நன்கொடை ஈர்த்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ.20 ஆயிரத்திற்கு மேல் எந்த நன்கொடையும் பெறவில்லை.

'த புருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை மட்டுமே பா.ஜ.க.வுக்கு ரூ.336.5 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. இது அந்த கட்சி பெற்ற மொத்த நன்கொடையில் 54.75 சதவீதமாகும். இதே அறக்கட்டளை காங்கிரசுக்கு ரூ.16.5 கோடி நன்கொடை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


abc